உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கிடைக்காதவர்களுக்கு அதனை மீண்டும் வழங்க நடவடிக்கை..!!

Read Time:1 Minute, 39 Second

exam-626x380வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கிடைக்காத மாணவர்களுக்கு அதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு கொழும்பு பல்கலைகழகத்தின் விரிவுரையாளர்கள் இணங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை வலையக் கல்வி பணிமனைகளூடாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வௌ்ளம் மற்றும் மணசரிவால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தகவல்களை திரட்டுவதற்காக 24 மணித்தியாலங்களும் செயற்படும் விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0112 78 63 84, 0712 365 965 அல்லது 0718 838 212 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாளை விடுமுறை இல்லை…!!
Next post பலத்த காற்று வீசியதால் பலூனில் பறந்த 9 பேர் படகில் குதித்து தப்பினர்…!!