ஜனாதிபதி நாளை ஜப்பானுக்கு விஜயம்…!!

Read Time:1 Minute, 56 Second

images (1)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜீ7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜப்பான் விஜயம் செய்ய உள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 42வது ஜீ7 மாநாடு நடைபெறவுள்ளது.

ஜப்பானிய பிரதமர் ஜின்சோ அபேவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் முதலாவது இலங்கை அரச தலைவர் என்ற பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே இந்த ஜீ.7 அமைப்பாகும்.

28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளன.

உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் இந்த மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே உள்ளிட்ட அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரநாயக்கவில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்படும்…!!
Next post கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம்…!!