எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 58 Second

201605272044107282_Missing-Indian-climber-found-dead-on-Mount-Everest_SECVPFநேபாளத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் மலையேற்ற சீசன் தொடங்கி உள்ள நிலையில், அங்குள்ள 8850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற குழுவினர் ஏறத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மலையேற்ற குழுவினர் சனிக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நெருங்கினர். 8849 மீட்டர் உயரத்தில் உள்ள ஹிலாரி ஸ்டெப்பில் சென்றபோது திடீரென தவறி விழுந்தனர். அவர்களை உடனடியாக ஷெர்பாக்கள் உதவியுடன் தேடும் பணி தொடங்கியது.

அப்போது சுபாஷ் பால் என்பவரை மீட்டு அடிவார முகாமிற்கு கொண்டு வந்து சிகிசிசை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஒருவர் மீட்கப்பட்டார். மேலும் பரேஷ் நாத் (வயது 58) மற்றும் கவுதம் கோஷ் ஆகியோரைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களை ஷெர்பாக்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், நான்காம் முகாமிற்கு மேற்பகுதியில் பரேஷ் நாத்தின் உடலை ஷெர்பாக்கள் இன்று கண்டுபிடித்துள்ளனர். பின்னர் இரண்டாவது முகாமிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. மற்றொரு வீரரின் உடல் 8000 அடி உயரத்திற்கு மேல் கிடக்கலாம் என கருதப்படுகிறது. அதனை கண்டுபிடித்து மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடும் காற்று வீசுவதால் அங்கு செல்வது கடும் சவாலாக இருப்பதாக ஷெர்பாக்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்பெல்லிங் பீ போட்டி: இளம்வயதில் வென்று சாதனை படைத்த இந்திய-அமெரிக்க சிறுவன்…!!
Next post இலங்கைக்கு வருகிறது அதிவேக இணைய 5G தொழில்நுட்பம்…!!