மீண்டும் போர் தொடங்கி விட்டதுபுலிகள் அறிவிப்பு

Read Time:2 Minute, 26 Second

LTTE.ezhilan2a.jpgபோர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. இனிமேல் போர்தான் என்று விடுதலை ப்புலிகள் அமைப்பின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவர் எழிலன் கூறியுள்ளார். திரிகோணமலை மாவட்டத்தில் சிங்கள கிராமங்களுக்குச் செல்லும் தடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடி விட்டதால் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கை ராணுவம் மற்றும் விமானப் படைகள் கடந்த ஐந்து நாட்களாக தாக்கி வருகின்றன. மதகுகளை திறந்து விடவும் கடுமையாக¬முயற்சித்து வருகின்றன.

இந்த நிலையில் போர் மீண்டும் தொடங்கி விட்டது. இனிமேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதாகக் கூற முடியாது, அது காலாவதியாகி விட்டது என்று திரிகோணமலை மாவட்ட புலிகள அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் எழிலன் கூறியுள்ளார்.

இதுகுறித்து எழிலன் கூறுகையில், கிழக்கு திரிகோணமலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடடில் உள்ள பகுதிகளை மீட்க இலங்கை ராணுவம் முயற்சித்து வருகிறது. இங்கு குண்டு வீசித் தாக்கிவருகிறது. அவர்களுக்கு புலிகள் பதிலடிகொடுத்து வருகின்றனர்.

போர் தொடங்கிவிட்டது. நாங்கள் எதற்கும் தயாராகஇருக்கிறோம். இந்தப் போரை அரசுதான் தொடங்கியுள்ளது. எங்களது பகுதிக்குள் ராணுவம் நுழைந்தால் அதை ராணுவ ரீதியாக சந்திக்க எங்களது படை தயாராகவே உள்ளன என்றார் எழிலன்.

இதற்கிடையே அணைப் பகுதியை ராணுவம் நெருங்கிவிட்டதாகவும், புலிகளுடன் நடந்த கடுமையான சண்டையில் 50க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதை புலிகள் மறுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்!
Next post மாவிலாறு அணைக்கட்டை நோக்கி படையினர் முன்னேற்றம்