By 2 June 2016 0 Comments

வீடியோ: அர்னால்டுக்கு ஆட்டம் காட்டிய ஆப்பிரிக்க யானை…!!

201606021759317049_Arnold-Schwarzenegger-gets-charged-by-elephant_SECVPF68 வயதான ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர், தென் ஆப்பிரிக்காவில் தனது குழுவுடன் காட்டில் பயணம் மேற்கொண்டார். அப்போது, யானை ஒன்று வழிமறித்து துரத்தியது. இந்த சம்பவத்தை வீடியோவாக அவர் வெளியிட்டிருக்கிறார்.

வீடியோவில், வண்டிக்கு எதிரே வந்த யானையைத் பார்த்த ஓட்டுநர் என்ஜினை அணைக்கிறார். திரும்பவும் அவர் காரை ஸ்டார்ட் செய்யும்போது யானை பின்வாங்க ஆரம்பிக்கிறது. பின்னர் சுற்றிக்கொண்டு வண்டியின் பின் பக்கமாக வந்து துரத்த ஆரம்பிக்கிறது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அர்னால்ட் “யானை துரத்துவதை படமாக எடுத்திருந்தால் கூட இத்தனை சிறப்பாக இருந்திருக்காது. இந்த விலங்கின் அழகை, வலிமையைப் பார்த்து பிரமித்துவிட்டேன். நாம் விலங்குகளைக் கொல்வதை நிறுத்த வேண்டும். அவற்றுடன் புகைப்படம் எடுங்கள். கொல்ல முயற்சிக்காதீர்கள். இந்த அழகான படைப்புகளை கண்டு ரசியுங்கள். தந்தத்தை திருடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam