மனைவிக்கு கணவன் எழுதிய காதல் கடிதம் 63 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த ஆச்சரியம்…!!

Read Time:2 Minute, 26 Second

letter_late_002.w540கனடா நாட்டில் உள்ள மனைவிக்கு ஜப்பான் நாட்டில் இருந்த கணவன் எழுதி அனுப்பிய காதல் கடிதம் ஒன்று 63 ஆண்டுகளுக்கு பிறகு மனைவிக்கு கிடைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Halifax நகரை சேர்ந்தவர் பில் அவால்ட். இவர் ஒரு ராணுவ வீரர் என்பதால் கடந்த 1953ம் ஆண்டு நிகழ்ந்த கொரியா யுத்தத்தில் பங்கேற்க தனது குடும்பத்தை விட்டுவிட்டு களத்திற்கு சென்றுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற போது அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். எழுந்து பார்த்த போது ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது, புதிதாக திருமணம் ஆகியுள்ளதால் தன்னுடைய உடல்நலம் குறித்து மனைவிக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். கடல் மார்க்கமாக பயணமாக அந்த காதல் கடிதம் இறுதியில் எங்கு சென்றது என இதுவரை புலப்படவில்லை.

இந்நிலையில், 63 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் பில் அவால்ட் எழுதிய அந்த கடிதத்தின் மேல் உறை மட்டும் கனடாவில் உள்ள அவரது மனைவியிடம் சமீபத்தில் தபால்காரர் கொடுத்துள்ளார்.

இது குறித்து பில் அவால்ட் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘மேல் உறைக்கு உள்ளே வைத்திருந்த கடிதம் இன்றளவும் சிக்கவில்லை. ஆனால், மேல் உறை மட்டும் தற்போது என் மனைவியிடம் வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு வேளை கடிதத்தை மாற்றி வேறொரு இடத்தில் வைத்துவிட்டதால், இந்த தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், கடிதத்தில் என்ன எழுதியிருந்தேன் என்ற அந்த செய்தி இன்றளவும் என் மனைவிக்கு செல்லவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
67 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
33 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கும் முன் வெங்காயத்தை கழுத்தில் வைத்து மசாஜ் செய்தால் தைராய்டு பிரச்சனை நீங்கும் தெரியுமா?
Next post திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது…!!