வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும் பப்பாளி விதை? உங்களுக்கு தெரியுமா?

Read Time:3 Minute, 46 Second

28-1467112679-1சுத்தமில்லாத கைகளினால் சாப்பிடுவதால், கிருமிகள் எளிதில் வயிற்றுக்கள் சென்று விடும்.கிருமிகளின் தொற்றாலும், நச்சுக்கள் கழிவுகள் வெளியேறாமல் வயிற்றிலேயே தங்கினாலும், வயிற்றில் புழுக்கள் உருவாகும். இவை நமது உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி அவை போஷாக்கினை தேடிக்கொள்ளும்.

குழந்தைகளுக்கு முக்கியமாய் வயிற்றில் புழு உண்டாகும். இதன் அறிகுறிகள், அடிக்கடி வயிற்று வலியில் அவதிப்படுவார்கள். சரியாக பசி எடுக்காது. இளைத்துப் போவார்கள். ஆசன பகுதியில் அரிப்பு ஏற்படும். தூக்கம் பாதிக்கும்.

இவை எல்லாம் இருந்தால், வயிற்றில் புழு உள்ளது என அர்த்தம். புழுவை அழிப்பதற்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பூச்சி மருந்து ஒரு ஆன்டிபயாடிக். பக்க விளைவுகளை உண்டாக்குபவை.

மிக தீவிரமாய் இருந்தால் தவிர, ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதனை வீட்டிலிலேயே ஒரு பொருளின் மூலம் சரி பண்ணலாம். அது என்ன தெரியுமா? பப்பாளி விதை.

பப்பாளி விதைப் பற்றிய ஆய்வு :

நைஜீரியாவில் பப்பாளி விதைகளின் ஆற்றலை கண்டுபிடிக்க, 2007 ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சி நடத்தினர். இதில் வயிற்றில் புழு கண்டறியப்பட்ட சுமார் 60 குழந்தைகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பரிசோதனை :

ஆய்வு தொடங்கும் முன் எல்லா குழந்தைகளுக்கும் மலப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வில் குழந்தைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர்.

பப்பாளி விதை மற்றும் தேன் :

முதல் பிரிவினருக்கு, வெயிலில் காயவைத்த பப்பாளி விதைகளை பொடி செய்து தேனுடன் கலந்து கொடுத்தனர். ஒரு வாரம் இவ்வாறு தரப்பட்டது.

வயிற்றுப் புழு அழிந்தது :

இரண்டாவது பிரிவினர் மருந்துகள் ஏதும் தராமல் வைக்கப்பட்டனர். ஒரு வாரம் கழித்து, முதல் பிரிவினரின் மலப் பரிசோதனையில் வயிற்றில் புழுக்கள் முழுவதும் நீங்கியிருந்தது. எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. இரண்டாவது பிரிவினருக்கு வயிற்றில் புழுக்கள் அப்படியே இருந்தது. சிலருக்கு தீவிரம் அடைந்தது.

ஆய்வின் முடிவு :

இந்த ஆய்வின் இறுதியில் பப்பாளி விதைகள் வயிற்று புழுக்களை முற்றிலும் நீக்கிவிடும் ஆற்றலை கொண்டுள்ளது. இவற்றை சாப்பிடுவதால் குழந்தைகளின் பசி அதிகரித்துள்ளது என முடிவிற்கு வந்தனர்.

வயிற்றுப் புழுக்களை அழித்திடுங்கள் :

இந்தியாவில் பப்பாளி மரங்கள் கணிசமாக வளரத் தேவையான மண் வளம் கொண்டவை. எங்கும் வளரும். உரம் தேவைப்படாது. பப்பாளி விதைகளை காய வைத்து பொடி செய்து தேவைப்படும்போது குழந்தைகளுக்கு தரலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, ஆண்கள் கவனிக்க மறக்கும் 6 விஷயங்கள்…!!
Next post படுக்கும் முன் வெங்காயத்தை கழுத்தில் வைத்து மசாஜ் செய்தால் தைராய்டு பிரச்சனை நீங்கும் தெரியுமா?