ஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்..!! (படங்கள்)

Read Time:3 Minute, 15 Second

400x400_MIMAGE4dc639b2bbbf41f4a5e03482a5c52ca7சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 25 வயது ஆண் மகனுக்கு நிகரான பாலியல் வளர்ச்சி பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதை வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி என கூறுகிறார்கள். மருத்துவ ரீதியில் ஆங்கிலத்தில் இது ‘Precocious puberty’ என குறிப்பிடப்படுகிறது.

இதுவே உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தால், வெறும் ஐந்து வயது சிறுமி, ஓர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவத்தை பற்றி அறிந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்கள். ஆம், உண்மை தான். பெருவை (Peru) சேர்ந்த ஓர் இளம் குழந்தையின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் தான் இது.
1939-ம் ஆண்டு பெருவை சேர்ந்த ஐந்து ஆண்டு ஏழு மாத வயது நிரம்பிய சிறுமி ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். உலகிலேயே இவர் தான் இளம் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

லீனா மெடினா எனும் அந்த சிறுமி பெருவில் உள்ள டிக்ரபோ எனும் ஓர் சிறிய ஊரில் பிறந்தவர். திடீரென லீனாவிற்கு வயிறு அசாதாரணமாக வீக்கமடைந்தது. இதனால் அச்சமுற்ற பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது தான் லீனா ஏழு மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது, மருத்துவர்கள் மற்றும் பெற்றோரை மிகவும் ஆச்சரியமடைய வைத்தது.மருத்துவர். ஜிரார்டோ லோசாடா என்பவர் தான் லீனாவிற்கு பால் சுரப்பி, பாலியல் உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருப்பதை கண்டறிந்தார

1939-ம் ஆண்டு மே மாதம் 14-ம் நாள் லீனாவிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த மருத்துவர் ஜிரார்டோ பெயரையே அந்த குழந்தைக்கு வைத்தனர்.

ஜிரார்டோ வளரும் வரை தனது தாயை அக்கா என்று தான் நினைத்து வந்தார். தனது பத்து வயதில் தான் லீனா தனது அக்கா அல்ல, தாய் என்பதை ஜிரார்டோ அறிந்தார்.

1979 வரை ஜிரார்டோ நல்ல ஆரோக்கியமாக தான் இருந்தார். பிறகு எலும்பு நோய் தாக்கத்தால் நாற்பது வயதில் மரணமடைந்தார்.

லீனாவின் தந்தையை கற்பழிப்பு வழக்கில் போலீஸ் முதலில் கைது செய்தனர். பிறகு, போதியளவு ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். லீனாவின் வாழ்க்கை வரலாறு டாக்குமெண்டரியாக எடுக்கப்பட்டுள்ளது. இவரது எக்ஸ்-ரே, புகைப்படங்கள் போன்றவை இன்றளவும் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

400x400_MIMAGE9e7a604262dc5e649c26bd22ffec42aa

400x400_MIMAGE83b3624951593628ea427b260e2f4fdb

400x400_MIMAGE88ac8d4f044085d45e453044536472cf

400x400_MIMAGEc02fa64046f119e9eee9a7d4de57c9d5

400x400_MIMAGEe2306f719b0488f71af5fadc38f73a02

54078

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பாவில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சிறந்த 5 நாடுகள்..!!
Next post போதைவஸ்து, சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு…!!