காபியை விட க்ரீன் டீ ஏன் நல்லது ? தெரிந்து கொள்ளுங்கள்…!!

Read Time:3 Minute, 24 Second

29-1467200762-1ஒவ்வொரு விடியலையும் காபியுடன் தொடங்குவதை நீங்கள் விரும்புகிறீர்களா? அதன் மணமும் சுவையும் உங்களை கட்டிப்போட்டுவிட்டது என்னவோ உண்மைதான்.

மூளைக்கு புத்துணர்ச்சி தந்து பல மடங்கு வேலையை செய்யத் தூண்டும். சில நேரத்திற்கு பிறகு மீண்டும் ஒரு காபியை உங்கள் மனம் குடிக்கச் சொல்லும்.

அப்படியெனில் நீங்கள் காபிக்கு அடிமை. காபி குடிப்பதால், உடனடியாக எனர்ஜி கிடைத்தாலும், அதை அடிக்கடி குடித்தால் உடலுக்கு நல்லதல்ல. பின் என்ன குடிக்கலாம் எனக் கேட்டால் க்ரீன் டீ தான் சிறந்த சாய்ஸாக இருக்கும் காபியை விட க்ரீன் டீ ஏன் சிறந்தது என அறிய விரும்புகிறீர்களா? மேலும் படியுங்கள்.

மூளையை துரிதப்படுத்தும் :

காபி குடித்தால் எவ்வளவு உற் சாகமாய் உணர்வீர்களோ அதே போல் க்ரீன் டீ குடித்தாலும் உணர்வீர்கள். காரணம் இதிலுள்ள தியானைன் என்ற மூலக்கூறு மூளையை துரிதமாக செயல்படச் செய்யும்.

பாலுணர்வை தூண்டும் :

க்ரீன் டீ பாலுணர்வைத் தூண்டும். செக்ஸ் ஹார்மோன்களை ஊக்குவிக்கும்

அல்சீமர் வியாதியை தடுக்கும் :

நரம்பு சம்பந்தப்பட்ட வியாதியான அல்சீமரை வரவிடாமல் க்ரீன் டீ தடுக்கும். கேட்சின் என்கின்ற ஃப்ளேவினாய்டு க்ரீன் டீயில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கிருமிகளை வெளியேற்றும் :

உடலில் தொற்றிக்கொள்ளும் கிருமிகளை க்ரீன் டீ அழிக்கும். இது ரத்தத்தில் கலக்கும் நச்சுக்களையும் வெளியேற்றும்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் :

க்ரீன் டீ இன்சுலின் சுரப்பை தூண்டும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் :

உடலுக்கு தேவையான எனர்ஜியையும் சத்தினையும் வளர்சிதை மாற்றத்தின் போதுதான் நாம் பெற்றுக் கொள்கிறோம். வளர்சிதை மாற்றம் நன்றாக நடந்தால், ஆரோக்கியமாக வாழலாம். க்ரீன் டீ வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும்.

புற்று நோயை தடுக்கும் :

க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. அவை உடலில் உருவாகும் பல புற்று நோய்களை தடுக்கக் கூடியவை. ஆகவே தினமும் க்ரீன் டீ குடிப்பதை ஒரு கட்டாய பழக்கமாகவே நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவில் நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஆறு விஷயங்கள்…!!
Next post தனியா இருக்கும் போது மாரடைப்பு வந்தால், இந்த ஒரு செயலை செய்வதன் மூலம் உயிர் போவதைத் தடுக்கலாம்…!!