திருமணத்திற்கு பிறகு ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர் பார்க்கும் 10 விஷயங்கள்…!!

Read Time:5 Minute, 8 Second

30-1467275422-1expectationsofmenontheirnewwifeதிருமணமாகிவிட்டது, இவள் நம்மளுக்கானவள், அன்பானவள், துணையானவள், நம் உரிமைக்கானவள் என உங்களுக்குள் பல எண்ணங்கள் ஓடலாம். ஆனால், என்ன தான் மனைவியாக இருப்பினும். அவர்களிடம் என்னென்ன எதிர்பார்க்க வேண்டும், கூடாது என சில விஷயங்கள் இருக்கின்றன.

படுக்கையறையில் தம்பதிகள் கூச்சமில்லாமல் செய்யும் 8 செயல்கள்! தாம்பத்தியத்தில் துவங்கி, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை, சுதந்திரம் என அவற்றை பற்றியும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அன்பு, அக்கறை, பாசம் நேசம், உறுதுணை என ஓர் ஆண், அடிப்படையாக ஒருசில விஷயங்களை தாராளாமாக தன் மனைவியிடம் எதிர்பார்க்கலாம். அல்லது கோரிக்கையாக கூட இல்லறத்தின் ஆரம்பத்தில் அவர்களிடம் முறையிடலாம்.

அவற்றில் முக்கியமான பத்து விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்…

எதிர்பார்ப்பு #1

அம்மா போன்ற அக்கறை! எல்லா ஆண்களும், தங்கள் புது மனைவியிடம் எதிர்பார்க்கும் விஷயம் இது. அம்மாவை போல அக்கறையாக, பாசமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்தால் மன்னிக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு #2

மற்றவர் பேச்சை கேட்க கூடாது, சுயமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். சிந்தித்து முடிவெடுப்பதில் மட்டுமின்றி, சந்தேகப் படுவதிலும் கூட மற்றவர் பேச்சை கேட்காமல், உண்மை அறிந்து செயல்பட வேண்டும்.

எதிர்பார்ப்பு #3

உறுதுணையாக, அரவணைப்பாக! இல்லறம், தொழில் என இரண்டு வாழ்க்கையிலும் ஆண்கள் சிறந்து விளங்க, தோல்வியில் துவண்டு போகமால் இருக்க, வெற்றிகளின் போது ஊக்கமளிக்க ஓர் நல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு #4

பெற்றோர் பற்றி குற்றம் குறை கூறுதல் கூடாது. உன் அம்மா, அப்பா, என் அம்மா, அப்பா, உன் குடும்பம், என் குடும்பம் என குடும்பத்தை பிரித்து பார்க்க கூடாது. எல்லோர் மத்தியிலும் ஒன்றாக நடந்துக் கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்பு #5

நாங்களாக கூறாவிடினும், அவர்களாக கேட்டு எங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து தர வேண்டும். அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளித்தால் மட்டற்ற சிறப்பு.

எதிர்பார்ப்பு #6

மற்றவர்கள் முன்னர் எங்களை அவமானம் / அவமரியாதையாக செய்ய கூடாது. மற்றவர் முன்பு கேலி, கிண்டல் செய்யக் கூடாது.

எதிர்பார்ப்பு #7

ஆபீஸ் விட்டு வரும்போது, சிரித்த முகமாக இருக்க வேண்டும். வந்த உடனே டென்ஷன் பண்ணக் கூடாது. ஏதேனும் பிரச்சனையாக இருந்தால் கூட, பொறுமையாக கூற வேண்டும். அதே போல, நாங்கள் ஆபீஸில் இருந்து வரும் போது எங்களை பார்த்தே நாங்கள் எந்த மனநிலையில் இருக்கிறோம் என அறிந்துக் கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்பு #8

ஒருவேளை அம்மாவே (மாமியார்) சண்டையிட்டாலும் கூட, பொறுத்துக் கொள்ள வேண்டும். சமாதானமாக இருக்க வேண்டும். பிறகு எங்களிடம் என்ன பிரச்சனை என விவரித்து, முடிந்த வரை குடும்பத்தில் விரிசல் விழாதபடி பிரச்சனைகளை கையாள வேண்டும்.

எதிர்பார்ப்பு #9

தவறு செய்தாலும் கூட வெளிப்படையாக எங்களிடம் கூறிவிடுங்கள். ஒருபோதும் செய்த தவறை மறைக்க நினைக்க வேண்டாம். தவறு செய்வது இயல்பு. ஆனால், ஒருமுறை செய்த தவறை மீண்டும், மீண்டும் செய்யக் கூடாது. தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்பு #10

எங்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட கூடாது. எங்கள் நண்பர்கள், அவர்களது வாழ்க்கை, எங்கள் நட்பிற்குள் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை கேட்டு இம்சை செய்யக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைப்பாகை கழற்றி ஆற்று நீரில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய சீக்கியர்
Next post பாலித்த தெவரப்பெருமவிற்கு எதிராக ஆசிரியர்களும் பெற்றோர்களும் வீதியில் ஆர்ப்பாட்டம்