யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் முன்னாள் ஆதரவாளர் பணமோசடியில் கைது
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர் ஒருவரை யாழ் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த காலங்களில் பாராளுன்ற உறுப்பினரின் தீவிர ஆதரவாளராக இருந்து தேர்தல் காலங்களில்
பலவகையான அதிரடிகளைச் கைது செய்யப்பட்டவர் செய்துள்ளார்.
இவ் ஆதரவாளர் பாராளுமன்ற உறுப்பினரின் சித்தப்பாவின் எரிபொருள் களஞ்சியத்தில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாலா என அறியப்படும் இவர் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலம் யாழ் பொலிஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள பாராளுன்ற உறுப்பினரின் உறவினருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 19 இலட்சம் ரூபா மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.