தலைப்பாகை கழற்றி ஆற்று நீரில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய சீக்கியர்
கனடாவில் ஆற்று நீரில் விழுந்து உயிருக்கு போராடிய பெண்ணை தன் தலைப்பாகை பயன்படுத்தி காப்பாற்றியுள்ளார் ஒரு சீக்கியர்.
அவ்தார் ஹோகி என்ற 65 வயதான சீக்கியர் கனடாவின் காம்லூப்ஸில் வசிக்கிறார். அவர் தன் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார்.
அவரும் அவருடைய மகன் பாலும் வயலில் வேலையாக இருந்த போது சற்று தொலைவிலிருந்து ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டுள்ளது.
குரல் வந்த திசையில் சென்ற போது ஒரு பெண் குளிர்ந்த ஆற்றுநீரில் நீந்த முடியாமல் உயிருக்காக போராடியுள்ளார்.
பால் அந்த பெண்ணை காப்பாற்ற ஏதும் மரக்கிளையைத் தேடிய போது, ஹோகி உடனடியாக தன் தலைப்பாகை கழற்றிப் வீசி, அந்தப் பெண்ணை கரை சேர்த்துவிட்டார்.
கரையேறிய அந்த பெண்ணை உடனடியாக அருகிலிருந்த அவரது பாட்டியின் வீட்டில் பத்திரமாக ஒப்படைத்து விட்டனர்.
சீக்கியர்கள் தங்கள் தலை முடியை வெளியில் யாரும் காட்டக்கூடாது என்பது அவர்களது வழக்கம். ஆனால், ஒருவரது உயிரைக் காப்பாற்ற அந்த வழக்கத்தைத் மீறியிருக்கிறார் இந்த மனிதாபிமானம் சீக்கியர்.
தனது தந்தையின் புத்திசாலிதனத்தை நினைத்து பெருமைப்படுவதாக அவ்தார் ஹோகி மகன் பால் தெரிவித்துள்ளார்.