தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு…!!
இரண்டு அமைச்சுக்கள் ஏற்றுக்கொண்டுள்ள மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக சிலர் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக அங்கு பயிலும் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோரின் ஒன்றியம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சும் உயர்நீதிமன்றத்தின் ஊடாக சுகாதார அமைச்சும் இந்த மருத்துவக் கல்லூரியை அங்கீகரித்துள்ளது.
இதனால், மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்த வேண்டியது இந்த நிறுவனங்களின் பொறுப்பு என ஒன்றியத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கு எதிரில் அனைவரும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.