பெண்ணின் தங்கச் சங்கிலி அறுத்தவரை மடக்கிப்பிடித்த பொலிஸார்…!!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் 07.07.2016 இன்று காலை இடம்பெற்றுள்ளது. 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் தங்க சங்கிலியே இவ்வாறு அறுத்து செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து விரைந்து செயற்பட்டு பொலிஸார் சந்தேக நபரான தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை அப்பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.