உ.பி.: பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை பஸ் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் இருந்து நேபாள நாட்டில் உள்ள பிட்வால் என்ற ஊரை நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ரியாச் மாவட்டத்தில் உள்ள போப்பட்பூர் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.
ரிசியா என்ற பகுதி வழியாக சென்றபோது எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு லாரி அந்த பஸ்சின்மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி டிரைவர், பஸ் டிரைவர், ஒரு குழந்தை உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களில் சுமார் பத்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.