செல்பி ஆசையில் ராட்சத அலையில் சிக்கி கணவன்-மனைவி பலி…!!

Read Time:3 Minute, 20 Second

201607180811519553_Caught-in-husband-wife-killed-the-sea-wave-desire-for-selfie_SECVPFதிருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் உமர் ஷெரீப் (வயது 42). சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பாத்திமா பீவி (40). மதரசா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். உமர் ஷெரீப்பின் நண்பர் ஜாபர் சாதிக் (45). பனியன் கடை நடத்தி வருகிறார்.

உமர் ஷெரீப், ஜாபர் சாதிக் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் ஒரு காரில் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். கன்னியாகுமரியை சுற்றி பார்த்து விட்டு நேற்று மதியம் நாகர்கோவில் அருகே உள்ள சொத்தவிளை வந்தனர். அங்கு கடல் அழகை ரசித்து விட்டு செல்போனில் படங்கள் எடுத்தனர். பின்னர் சங்குத்துறை கடற்கரை வந்தனர்.

அங்கு உமர் ஷெரீப்பும், பாத்திமா பீவியும் கடலில் கால்களை நனைத்தபடி தங்கள் செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர். அப்போது வந்த ராட்சத அலை பாத்திமா பீவியை கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உமர் ஷெரீப், மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவரையும் கடல் அலை இழுத்து சென்றது.

இதனால் கரையில் இருந்த அவர்களின் மகள்கள் அலறியடித்துக்கொண்டு பெற்றோரை காப்பாற்ற கடலுக்குள் ஓடினர். அப்போது மீண்டும் பெரிய அலை வந்ததால் உடனே ஜாபர் சாதிக், நண்பரின் மகள்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு சென்றார். அதற்குள் உமர் ஷெரீப், பாத்திமா பீவி ஆகியோரை கடல் அலை இழுத்து சென்று விட்டது.

இதைகண்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலில் இறங்கி, கணவன்- மனைவி இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் பரிசோதித்து பார்த்து விட்டு உமர் ஷெரீப், பாத்திமா பீவி ஆகியோர் இறந்து விட்டதாக கூறினர். ஆனால் உமர் ஷெரீப்புக்கு நாடித்துடிப்பு இருந்ததாகவும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி அங்கு இருந்தவர்கள் கூறினார்கள். அதை மருத்துவ குழுவினர் ஏற்க மறுத்து சென்று விட்டனர்.

உடனே ஜாபர் சாதிக் தன்னுடைய காரில் உமர் ஷெரீப்பை ஈத்தாமொழியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, தற்போது தான் அவர் இறந்தார் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பெண் என்ஜினீயர் பலி…!!
Next post சிகிச்சைக்கு சென்ற பிளஸ்–1 மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் கைது…!!