மதுரையில் பயங்கரம்… ஜாமீனில் வெளிவந்த ரவுடி வெட்டிக் கொலை- வீடியோ
மதுரையில் ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் பாண்டி. ரவுடியான இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
சிறையில் இருந்த ரமேஷ் பாண்டி, சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.