எந்தெந்த கிழமையில் எந்த கடவுளை வணங்கினால் சிறந்த பலன் தரும்…!!

Read Time:2 Minute, 28 Second

days_pic_002.w540ஞாயிறு: கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்கலாம்.

திங்கள்: சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

செவ்வாய்: சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

புதன்: பெருமாளை சேவிப்பது நன்மை தரும். துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும்.

வியாழன்: நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர் போன்ற மகான் களை ஆராதனை செய்ய உகந்த நாள் பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நன்மை தரும்.

வெள்ளி: மஹாலக்ஷ்மி வழிபாடு நன்மைதரும். கோபூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும்.

மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.

சனி: ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்த நாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள். விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டமான ஐடியாவால் மணமகளுக்கு நேர்ந்த அவமானம்…!! வீடியோ
Next post வாரம் ஒருமுறை சால்மன் மீனை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…!!