மரணதண்டனையும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்ட இரு குற்றவாளிகள்…!!
மாத்தறை ஹித்தெட்டிய பிரதேசப் பகுதியினில் 2008.12.18 இல் இடம்பெற்ற கொலைக்கும், அதே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை கத்தி மூலம் தாக்கியமைக்கான குற்றத்திற்கும் நேற்று மாத்தறை நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த 34 வயது மற்றும் 25 வயதுடைய குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இதேவேளை பெண்ணெருவரை கத்தியினால் கொடூரமாக காயப்படுத்திய குற்றத்திற்காக அதே நபர்களுக்கு 8 வருட சிறைத்தண்டனையும் 60,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதப் பணத்தினை செலுத்த தவரும் பட்சத்தில் மேலதிகமாக 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.