By 27 July 2016 0 Comments

இளம்பெண்களை கற்பழித்து நகைகளை பறித்த வாலிபர் மனைவியுடன் கைது: பாதிக்கப்பட்ட பலர் புகார்…!!

201607271317481480_young-women-molested-youth-arrest-in-trichy_SECVPF‘பேஸ்புக்’ இளைஞர்கள்- இளம்பெண்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. அதன் மூலம் பயன்கள் இருந்தாலும் சில நேரங்களில் ஆபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த சுவாதி கொலையை கூட காரணமாக கூறலாம்.

இந்த நிலையில் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்படுத்தி இளம்பெண்களை கற்பழித்த வாலிபர் மனைவியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாயமானார். இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் நவல்பட்டு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சில நாட்கள் கழித்து அந்த மாணவி, நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி தன்னை வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கற்பழித்ததோடு, தான் அணிந்திருந்த 2 பவுன் நகையை அபகரித்து சென்றதாகவும், அந்த வாலிபருடன் அவரது அக்காள் என்று கூறிக்கொண்டு ஒரு பெண் இருந்ததாகவும், அவர்களின் புகைப்படத்தையும் கொடுத்து கதறி அழுதார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த மாணவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் மகளை ஒப்படைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், கல்லூரி மாணவியை கற்பழித்து நகையை பறித்து சென்ற வாலிபரையும், அவருடன் உள்ள பெண்ணையும் தேடி கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் திருப்பதி, சென்னை, திருப்பூர், கோவை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சாதாரண உடையில் சென்று கல்லூரி மாணவி கொடுத்த அந்த வாலிபரின் புகைப்படத்தை வைத்து ஒரு மாத காலமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த வாலிபரும், அவருடன் இருந்த பெண்ணும் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு அரசு பஸ்சில் இருந்து கீழே இறங்கியதை கண்ட போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் பெயர் குருதீன தயாளன் (வயது 27) என்பதும் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள நொச்சிபாளையம் சொந்த ஊர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து குருதீனதயாளனிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நான் பட்டப்படிப்பு முடித்து விட்டு பல வருடங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்தேன். அப்போது பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் பக்கங்களில் அதிக அளவில் இளம்பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டேன். கடந்த 2013-ம் ஆண்டு முகநூல் பக்கம் மூலம் அறிமுகமான சென்னையை சேர்ந்த பிரியதர்சினி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்திற்கு பின் உல்லாச வாழ்க்கைக்கு தேவையான பணம் என்னிடம் இல்லாததால் குறுக்கு வழியில் சம்பாதிக்க திட்டமிட்டு முகநூல் பக்கம் மூலம் அழகான பெண்களை கவர்ந்து அவர்களை, அவர்களது ஊருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வருமாறு அழைப்பேன்.

அப்போது என் அக்காள் உன்னை பார்த்து சரின்னு சொன்னால்தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன், ஆகவே உன்னிடம் இருக்கும் நகைகளை அணிந்து கொண்டு வா என ஆசைவார்த்தை கூறினேன்.

இதில் மயங்கி வரும் பெண்களிடம், எனது மனைவி பிரியதர்சினியை எனது அக்காள் என கூறி அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு அந்த பெண் விருப்பப்பட்டால் அவருடன் உல்லாசமாக இருப்பேன். முரண்டு பிடித்தால் அவரை, அவரின் விருப்பத்திற்கு மாறாக கற்பழித்து அதன்பின் அவர் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக்கொண்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவோம். மேலும் நகைகளை விற்று இருவரும் ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்து வந்தோம்.

கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வீட்டில் கோபித்துக்கொண்டு வந்த பெண்கள் மற்றும் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட பின் வேலை தேடி அழையும் ஜோடிகளை கண்டுபிடித்து திருப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அந்த இளம்பெண்களிடம் உல்லாசமாக இருப்பேன். அவர்களிடம் பிரியதர்சினி நகைகளை பறித்துக் கொண்டு அனுப்பி வைப்பார்.

இதுபோல கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 10-க்கும் மேற்பட்ட பெண்களை வேளாங்கண்ணி, தஞ்சாவூர், சென்னை, திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு அழைத்து சென்று, அங்குள்ள ஓட்டல்களில் அறை எடுத்து கற்பழித்து உள்ளேன். அவர்களிடம் இருந்த நகைகளையும் பறித்து உல்லாசமாக வாழ்ந்து வந்தோம். தற்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம்.

இவ்வாறு குரு தீனதயாளன் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கணவன்-மனைவி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குருதீனதயாளனால் பாதிக் கப்பட்ட பெண்கள் அவர் மீது புகார் கொடுக்க முன் வந்துள்ளனர். அதன் மூலம் இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..Post a Comment

Protected by WP Anti Spam