விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை..!!
விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களும் இன்று அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
காங்சேன்துறை துறைமுகத்தினூடாக சர்வதேச கடல் எல்லையில் இவர்கள் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேரும் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டனர்.
இதேவேளை இருநாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பிலும் தீர்வு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலுக்கு கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.