காஸ்ட்ரோ உயிரோடு இருக்கிறாரா? அமெரிக்காவில் பரவிவரும் வதந்தி

Read Time:3 Minute, 9 Second

castro_0.jpgகிïபா நாட்டின் கம்ïனிஸ்டு அதிபரான பீடல் காஸ்ட்ரோ கடந்த மாதம் (ஜுலை) 26-ந்தேதிக்கு பிறகு காஸ்ட்ரோ பொதுமக்கள் யார் பார்வையில் தட்டுப்படாததாலும், ராணுவம் போலீஸ் திரட்டப்படுவதாலும் அவர் இறந்து போயிருக்கலாம் என்ற வதந்தி அமெரிக்காவில் பரவி உள்ளது.

அமெரிக்கா அருகே உள்ளது கிïபா நாடு. இதன் அதிபராக கடந்த 47 ஆண்டுகளாக பதவியில் இருந்தவர் பீடல் காஸ்ட்ரோ. அவர் குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அதற்காக ஆபரேஷன் செய்யப்போவதாகவும் அதனால் தற்காலிகமாக ஆட்சியை தன் தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து இருப்பதாக அவர் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாக அரசு டி.வி. அறிவிப்பாளர் அறிவித்தார். அதற்கு மறுநாள் அவர் முழுநலத்துடன் இருப்பதாக காஸ்ட்ரோ கூறி இருப்பதாக டி.வி.அறிவிப்பாளர் ஒருவர் டி.வி.யில் அறிவித்தார்.

ஆபரேஷனுக்குப்பிறகு, அவரது போட்டோவோ, டி.வி.காமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியோ எதுவும் வெளியிடப்படவில்லை. அதோடு புதிதாக பதவி ஏற்ற ரால் படமும் வெளியிடப்படவில்லை. ஆட்சிமாற்றம் ஏற்பட்டு 3 நாட்கள் ஆகியும் அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் யாரும் பார்க்கவில்லை.

இந்தநிலையில் அரசு சார்பில் நடத்தப்படும் காய்கறிக்கடையில் வேலை செய்யும் பெண் வில்மா கட்டியரஸ் கூறுகையில் “என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ரால் பொதுமக்களிடம் பேசுவார் என்று காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஹவானா நகரில் போலீஸ் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. கம்ïனிஸ்டு அமைப்புகளில் உள்ள தொண்டர்படை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இந்தப்படை கலவரக்காலங்களில் மட்டும் அதை அடக்குவதற்கு பயன்படுத்தப்படும். ராணுவ வீரர்கள் முகாமுக்கு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.போலீசாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்பக்கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

காஸ்ட்ரோ கடந்த மாதம் 26-ந்தேதி முதல் பொதுமக்கள் முன்னிலையில் தட்டுப்படாததாலும், அவரது உடல்நிலை பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படாததாலும் அவர் இறந்து போய்விட்டதாக அமெரிக்காவில் வதந்தி பரவிஉள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உக்ரைன் நாட்டின் அதிபர் தன் அரசியல் எதிரிக்கு பிரதமர் பதவி அளிக்க திட்டம்
Next post பொது இடங்களில்் புகைப்படம் ‘கிளிக்’-சௌதி அரசு அனுமதி