உலகின் மிகப்பெரிய நீர்ச்சறுக்கில் விளையாடிய 10 வயது சிறுவன் பலி: போலீசார் விசாரணை..!!

Read Time:2 Minute, 11 Second

201608081459563012_Boy-dies-on-Kansas-waterslide-billed-as-world-biggest_SECVPFஅமெரிக்காவில் உள்ள கான்சாஸ் நகரத்தில் உள்ள சிலிட்டர்பான் என்ற பொழுதுபோக்கு நீர் பூங்காவில் உலகின் மிகப்பெரிய நீர்ச்சறுக்கு உள்ளிட்ட விதவிதமான நீர்ச்சறுக்குகள் உள்ளன. முக்கிய சுற்றுலாப் பகுதியான இந்த பூங்காவிற்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நீர்ச்சறுக்கில் விளையாட ஆர்வம் காட்டுவதுண்டு.

நேற்றும் அதுபோல ஏராளமான பயணிகள் வந்து நீர்ச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். அப்போது, மிகப்பெரிய நீர்ச்சறுக்கு விளையாடிய 10 வயது சிறுவன் காலேப் ச்வாப் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தான்.

இதுகுறித்து நீர்ச்சறுக்கு பூங்காவைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில் ‘என்ன நடந்தது என உண்மையிலேயே தெரியவில்லை. எனினும் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

நீர்ச்சறுக்கு பூங்காவில் நிகழ்ந்த சிறுவனின் மரண சம்பவத்தை விபத்து என பதிவு செய்திருக்கும் கான்சாஸ் போலீஸ், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பூங்கா மூடப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் உயிருடன் எரித்து கொலை…!!
Next post மர்ம மனிதர்கள் தாக்குதல்: துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைக்கிடம்…!!