இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவனை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!!

Read Time:13 Minute, 11 Second

002obb
இயற்கையாக மரணமடைந்த (புங்குடுதீவு) அப்பாவித் தமிழன் ஒருவனை, ஜ.எஸ்.ஐ இயக்கத்தில் இணைத்துவிட்ட தமிழ் ஊடகங்கள்..!!

இயற்கையாக மரணமடைந்த பாரிஸ் வாழ் தமிழன் ஒருவர் எப்படி ஜ.எஸ்.ஐ இயக்கத்தோடு சம்பந்தப்பட்டார் என்பதை அறிய முன்பு….

புலம்பெயர் தமிழர்களிடையே பல ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் புற்றீச்சலாக இன்று முளைத்து விட்டன.

காரணம் என்ன?? 50டொலருடன் ஒரு இணையதளத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதும், இணையதளங்களை இயக்க தெரியாதவர்கள் கூட காசு கொடுத்து, வேறொருவரை நியமித்து ஒரு இணையதளத்தை இயக்கிக் கொள்ளலாம் என்ற நிலையில், தமிழ் எழுத, வாசிக்க, படிக்க தெரியாதவர்கள் கூட இணையதளம் ஒன்றை விலைக்கு வாங்கி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒருவரே 10க்கு மேற்பட்ட இணையதளங்கள் வைத்துள்ளார்கள். பேஸ்புக்கில் பல்வேறு பெயர்களில் முகம் காட்டாமல், புதிய புதிய கணக்குகளை திறந்து உலாவி வருவதுபோல், உலகம் முழுவதும் தமிழ் இணையதளங்கள் வியாபித்துள்ளன.

இதன் வெளிப்பாடு, எப்படி? “தமிழ் மக்களை” தங்கள் தங்கள் இணையதளத்தை பார்வையிட (கவர்ந்து கொள்ள) வைக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு இணையத்தளத்தினரிடையேயும் ஏட்டிக்கு போட்டியாக பல்முனை போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

“இன்று உலக மக்கள் மத்தியில் ஓர் இயக்கம் செயல்பட்டு அவர்கள் சிந்தனையில் பெரிய மாற்றத்தையே உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது என்றால் அதுதான் ‘ஊடகம்’.”

uthayan_logoஎப்படிப்பட்ட செய்திகளை பிரசுரித்தால்.. (பரபரப்பு செய்திகள், சினிமா செய்திகள், பிரபாகரன் அல்லது புலிகள் சம்பந்தமாக புகழ்பாடும் செய்திகள், மகிந்த அல்லது சிங்களவர்களுக்கு எதிரான இனவாத செய்திகள், கள்ளக்காதல், காமலீலைகள்… இப்படியான செய்திகளை பார்ப்பதில் தான் தமிழர்களும் ஆர்வமாகவுள்ளார்கள் என்பதுதான் யதார்த்தம்.) தமிழ்மக்களை இலகுவில் கவர்ந்து கொள்ளலாம் என்பதை, இணையதளம் நடத்துபவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இணையதளங்களை பார்வையிடும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இணையதளங்களில் வரும் செய்திகளின் “உண்மை தன்மை” பற்றி அறியும் திறன் அற்றவர்களாகவே உள்ளார்கள். தாங்கள் வாசிக்கும் செய்திகள் யாவும் 100வீதம் உண்மை என்றே நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு ஊடகமும் பல இலச்சக்கணக்கான வாசகர்களை கொண்டுள்ளார்கள் என்பதும், இன்றைய உலகில் இணையதளத்தில் வரும் ஒரு செய்தி பேஸ்புக் மூலம் பரப்பப்பட்டு பல இலட்சக்கணக்கான பேரை சென்றடைகிறது.

ஊடகங்களுக்கு என்று ஒரு தர்மம் உண்டு. அதை யாரும் கடைபிடிப்பதில்லை. எல்லா ஊடகங்களுமே தாங்கள் நடுநிலைமையானவர்கள், நேர்மை தன்மை வாய்ந்தவர்கள் என பெயருக்கு சொல்லிக் கொள்கிறார்கள்…

அங்கு ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. “ஒரு பக்கச் சார்பு நிலை, பொய், புரளி, புரட்டு, வதந்தி.. கொஞ்ச உண்மை, ஒரே செய்தியை எல்லா இணையதளங்களும் மாறி மாறி கொப்பி பண்ணி பிரசுரிப்பது….” இவைகள் மூலம்தான் புலம்பெயர் தேசத்து வாழ் தமிழர்களின் ஊடகங்கள் யாவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் ஒரு சில ஊடகங்கள் விளம்பரம், மரண அறிவித்தல் போன்றவற்றால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில்… “தங்களுடைய வருமானத்தை மேலும் பெருக்கிக் கொள்வதற்காக பலபொய்யான, இட்டுக்கட்டிய செய்திகளை புனைந்து எழுதி தமிழா்களிடையே பரப்புப்புவதில் இந்த ஊடகங்கள் பாண்டித்தியம் பெற்றுள்ளார்கள். (எல்லாருக்கும் இந்த கலை கைவராது)

002oba
அந்தவகையில்.. ஒருவரின் மரணசெய்தியையே “பொய் செய்தியாக” புனைந்து பரப்பி, கடைசியில் அவரின் மரணச்சடங்கையே முடக்கிய மாபெரும் பாதகச்செயல்தனை செய்த சில ஊடகங்கள் பற்றியே தமிழா்களாகிய நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், எனிமேல் இப்படியான செய்திகளை பரப்பி அதன் மூலம் பிழைப்பு நடத்துவதை இந்த ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என்பதுமே இச்செய்தியை நாம் உங்கள்முன் பகிர்ந்து கொள்கின்றோம்…

ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்தானா? அல்லது கெட்டவனாக வாழ்ந்தானா? எப்படி வாழந்தான்?? என்பதற்கு அப்பால் “மரணம்தான் மனிதனின் கடைசி அத்தியாயம். அதாவது கடைசிப்பயணம்.

உங்கள் உறவினர் ஒருவர் மரணித்து, அவரின் கடைசிப் பயணமே தடைபடுகின்றது என்றால் கொஞ்சமேனும் மனிதாபிமான ரீதியில் சிந்தித்துப் பாருங்கள் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்??

தமிழர்களை பொருத்தவரை “ஒரு உறவினர் இறந்தால் அவரின் மரணச்சடங்கை சொந்த, பந்தங்கள், உற்றார், உறவினர்கள் ஒன்று சேர்ந்து மிகவும் சிறப்பாக செய்வது அவா்களின் கடமையாகவும், தாங்கள் செலுத்தும் கடைசி அஞ்சலியாகவும் அமையும்.

இறந்தவர் ஒருவருக்கு இதைக்கூட நாம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டால்??

அப்படி ஒரு நிலைதான் மரணத்தை வைத்து பிழைப்பு நடத்தும், “லங்கா ஸ்ரீ”, “யாழ் உதயன்” மற்றும் பொய் செய்திகளை வைத்தே பிரபல்யமாகிய “அதிர்வு” போன்ற ஊடகங்கங்களால், பிரான்ஸில் மரணமடைந்த “யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இராமலிங்கம் ஞானசேகரம் (வயது – 46) என்பவருக்கு நடந்த சம்பவமாகும்.

Gnanasegaran-01
பிரான்ஸில், யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இராமலிங்கம் ஞானசேகரம் (வயது – 46) என்பவரே உயிரிழந்தார். (இவர் புங்குடுதீவு முதலாம் வடடாரத்தை சேர்ந்த அமரர். இராமலிங்கம், புங்குடுதீவு இரண்டாம் வடடாரத்தை சேர்ந்த திருமதி. மல்லிகா ஆகியோரின் மகன் ஆவார்.) இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்னர், பிரான்சில் இறந்தமை காரணமாக இவர், மனம் குழம்பிய நிலையில், தனது வாழ்க்கையை தனிமையில் (கூடுதலாக பூங்காவிலேயே) கழித்து வந்துள்ளார்.

இவரின் தனிமை வாழ்க்கை, கவனிப்பாரற்ற நிலை காரணமாக அவரின் வாழ்க்கை சீரழிந்து போய் உள்ளது. 18.072016 அன்று இவர் மயங்கிய நிலையில் பாரிஸ் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்து மீட்க்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 25.07.2016 அன்று மரணமாகி இருந்தார்.

இவரது மரண சடங்கு, ஈமக்கிரியைகளை “பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள்” இணைந்து 29.07.2016 அன்று நடாத்த முடிவாகியிருந்தது.

இன்நிலையில் “லங்கா ஸ்ரீ”, “யாழ் உதயன்”, “அதிர்வு” ஊடகங்களில் மேற்படி செய்தியைத் திரிவுபடுத்தி, பிரான்ஸ் பாரிசில் இருந்து சுமார் 800 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள “நீஸ் நகரில்” நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்து இவர் இறந்ததாக (“பிரான்ஸ் ஐ.எஸ் தாக்குதலில், இலங்கைத் தமிழரும் பலி” என்று) பொய்யாக தமது ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்து இருந்தார்கள்.

“லங்கா ஸ்ரீ”, “யாழ் உதயன்”, “அதிர்வு” ஊடகங்களில் வந்த இந்தச் செய்தியானது உண்மையென நம்பிய பல இணையதளங்களும் அதை கொப்பி பண்ணி பிரசுரித்திருந்தார்கள்.

002obb
இந்நிலையில் 29.07.2016 அன்று நடைபெறவிருந்த மரணச்சடங்கு “மேற்படி திரிவுபடுத்தப்படட செய்திகள்” வெளிவந்த காரணத்தினால், இலங்கை தூதுவராலயம் தலையிட்டு, பிரான்ஸ் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் மேலதிக விசாரணைக்காக இராமலிங்கம் ஞானசேகரம் மரணச் சடங்கு, ஈமக்கிரியைகள் செய்ய முடியாமல் பிரான்ஸ் பொலிசாரால் தீடீரென நிறுத்தி வைக்கப் பட்டது.

அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் “நீஸ் நகரில்” தாக்குதலில் கொல்லப்பட்டாரா? “நீஸ் நகரில்” தாக்குதலில் இவரும் ஈடுபட்டாரா? அல்லது இவரும் ஐ.எஸ்.ஜ அமைப்பபை சேர்ந்தவரா?? என பல்வேறுபட்ட கோணங்களில் விசாரணைகள் இரண்டு கிழமைகளாக பிரான்ஸ் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டதன் பின்பே அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட பொய்யான செய்தியை பிரசுரித்து மஹாபாத செயலை செய்த ஊடகங்களான (“லங்கா ஸ்ரீ” குழுமத்தை சேர்ந்த ஜே.வி.பி., தமிழவின், “யாழ் உதயன்” பத்திரிகை, “அதிர்வு” இணையம்) இன்றுவரை, இச்செய்தியை தாங்கள் தவறாக பிரசுரித்து விட்டோம் என ஒரு மறுப்பறிக்கை கூட வெளியிடவில்லை என்பதுதான் இங்கு கவலைக்குரிய விடயமாகும்.

இறந்தவர் அவா்களின் உறவினரா இல்லையே??

அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் உறவினர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை மனிதாபிமானமுள்ள தமிழர்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

• சம்பந்தா சம்பந்தமில்லா இப்படிப்பட்ட பொய் செய்திகளை எப்படி புனைகிறார்கள்? அதிசயமான மூளைசாலிகள் தான் இவர்கள்.

* யாராவது ஒருவர் இறந்தால் “சவப்பெட்டிக் கடை வைத்திருபவர்கள், மரணச்சடங்கு செய்பவர்கள் எப்படி சந்தோசப்படுவார்களோ… அதேபோல் மரணஅறிவித்தலை வைத்துப் பிழைப்பு நடத்தும் “லங்கா ஸ்ரீ”, “உதயன்” போன்ற ஊடகங்களுக்கு தமிழர்கள் யாராவது இறந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும் தானே!

இதேவேளை பலசிரமங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்றையதினம் அமரர் இராமலிங்கம் ஞானசேகரத்தின் ஈமைக்கிரிகைகள் “பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால்” நடைபெற உள்ளது என்பதை அனைவருக்கும் அறியத தந்துள்ளனர். அமரர் இராமலிங்கம் ஞானசேகரத்தின் ஈமைக்கிரிகைகள் சிறப்புற நடைபெற வேண்டும் என்பதோடு, ஆழந்த அனுதாங்களையும் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நன்றி..
தகவல்… -புங்கையூர் மைந்தன்- Thanks… www.athirady.com

**** இதுகுறித்த முன்னைய செய்தியை பார்வையிட… ****

செத்த வீட்டு விடயத்திலும், வாசகர்களை குழப்பும்.. “லங்கா ஸ்ரீ” இணைய குழுமம்..!

தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?…

அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் குறித்த மரணசடங்கு அறிவித்தல்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமரர் இராமலிங்கம் ஞானசேகரம் குறித்த மரணசடங்கு அறிவித்தல்…
Next post நயன்தாராவின் ‘லிப் டூ லிப்’ வீடியோவை பார்த்தீங்க, இதை பார்த்தீங்களா? (VIDEO)