காதலியை ஆட்டோவில் அழைத்துச் சென்று இரு நண்பர்களுக்கு பங்கு போட்ட காதலன்; அநுராதபுரம் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிஸாரால் கைது..!!

Read Time:3 Minute, 43 Second

1855340அநு­ரா­த­புரம் விலச்­சிய பிர­தே­சத்தில் 16 வய­தான காத­லியை முச்­சக்­க­ர­வண்­டியில் அழைத்துச் சென்று, தனது நண்­பர்கள் இரு­வ­ருடன் சேர்ந்து அவரை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி அதன் பின் அவரை வீதியில் விட்டு சென்­றமை தொடர்பில் குறித்த சந்­தேக நபர்கள் மூவரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக விலச்­சிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அநு­ரா­த­புரம் விஹா­ர­பா­லு­கம பிர­தே­சத்தை சேர்ந்த பிர­தான சந்­தேக நப­ரான குறித்த இளைஞன் தனது நண்­பர்கள் இரு­வ­ருடன் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றில் கடந்த 9 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் தனது காத­லி­யான புரு­த­கஸ்­ஹந்­திய பிர­தே­சத்தை சேர்ந்த 16 வய­தான சிறு­மியை சந்­திக்க சென்­றுள்ளார்.

அதன்­போது, தனது பெற்றோர் நித்­தி­ரையில் இருந்த வேளையில் இச்­சி­றுமி யாருக்கும் தெரி­யாமல் வீட்­டுக்கு முன்­பா­க­வுள்ள வீதிக்கு வந்து தனது காத­லனை சந்­தித்­துள்ளார்.

அங்கு நின்று நாம் பேசிக்­கொண்­டி­ருப்­ப­தனை எவ­ரா­வது அவ­தா­னித்து விடு­வார்கள் என சிறு­மி­யிடம் கூறிய அந்த இளைஞன் அவரை நய­வஞ்­ச­க­மாக முச்­சக்­க­ர­வண்­டியில் ஏற்றிக் கொண்டு விலச்­சிய வாவி பக்­க­மாக சென்­றுள்ளார்.

விலச்­சிய பிர­தே­சத்­தி­லுள்ள பாழ­டைந்த இடத்­துக்கு சிறு­மியை அழைத்துச் சென்ற அவரின் காதலன், அவரை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் பின்னர் முச்­சக்­க­ர­வண்­டியில் அவ­ருடன் வந்த மற்­றைய இரு இளை­ஞர்­களும் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர் என்று பொலிஸார் மேற்­கொண்­டுள்ள விசா­ர­ணை­களில் தெரியவந்­துள்­ளது.

அதன்­பின்னர் அச்­சி­று­மியை, அதி­காலை வேளையில் ஒயா­ம­டுவ பிர­தே­சத்தில் விட்­டு­விட்டு சந்­தேக நபர்கள் மூவரும் தப்பிச் சென்­றுள்­ளனர்.

அதன்­பின்னர் வீடு திரும்­பிய சிறுமி தனது பெற்­றோ­ரிடம் இது தொடர்பில் தெரி­வித்­த­தனை­ய­டுத்து விலச்­சிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் அநுராதபுரம், விஹாரபாலுகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்திருந்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீர்: மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட இருவர் பலி…!!
Next post பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?