சிரியா-லெபனான் எல்லையில் இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 தொழிலாளர்கள் பலி

Read Time:1 Minute, 52 Second

Lebanan.jpgலெபனான் மீது இஸ்ரேல் கடந்த 25 நாட்களாக தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட் உள்பட லெபனானின் முக்கிய நகரங் கள் குண்டு வீச்சில் தீப்பற்றி எரிகின்றன. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெப னானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இஸ்ரேலின் விமானங் கள் நேற்று மாலை லெபனான்-சிரியா எல்லை பகுதியை ஒட்டியுள்ள பிகா பள்ளத்தாக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டு வீசியது. அந்த பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

தொழிலாளர்கள் விளை பொருள்களை லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் ஏதும் அறியாத அப்பாவி தொழிலாளர்கள் 26 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

அதன் அருகே உள்ள 2 நகரங்கள் மீதும் குண்டு மழை பொழிந்தது. 150 தடவை விமானங்கள் குண்டு வீசின. நேற்று ஒரே நாள் தாக்குதலில் மட்டும் 40 பொதுமக்கள் பலியானார்கள். கட்டிட இடி பாடுகளில் இன்னும் பலர் உயிரோடு புதைத்துள்ளனர். இதுவரை நடந்த தாக்குத லில் லெபனானில் மட்டும் 900க்கும் மேற்பட்ட அப் பாவி பொதுமக்கள் பலியா னார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூதூர் சண்டை முற்றுப்பெற்றது
Next post மூதூரில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறினார்கள்