விஷ ஊசி விவகாரம் தொடர்பாக பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க தூதரகம் பின்வாங்கல்…!!

Read Time:2 Minute, 0 Second

index-186-300x168விஷ ஊசி விவகாரம் தொடர்பாக பரிசோதனை செய்வதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பின்வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னாள் போராளிகள் 14 பேர் வரை விஷ ஊசி பரிசோதனைக்கு வடக்கு முதலமைச்சரின் செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பரிசோதனை செய்வதற்குரிய உபகரணங்கள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து விஷ ஊசி பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்படுவோருக்கான பரிசோதனைகள் உள்ளுர் வைத்தியர்களின் ஊடாக மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய கிடைக்கின்றது.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் அண்மையில் சந்தித்த போது, விஷ ஊசியை பரிசோதனை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கள மாணவர்கள் எதிர்ப்பு!- கைவிடப்பட்ட உயர்கல்வி அமைச்சரின் வருகை..!!
Next post தான் இறக்கப்போவதாக நினைத்து கண்ணீர் வீடும் மாடு! கண்கலங்க வைக்கும் காட்சி…!! வீடியோ