ஆலமரத்திற்காக ஆற்று நீரில் குதித்த மக்கள்! நூதன போராட்டம்…!!

Read Time:2 Minute, 20 Second

imagesஈரோட்டில் ஆலமரத்தை வெட்டி சாய்க்க வந்தவர்களை வெட்ட விடாமல் தடுக்க கிராம மக்கள் அனைவரும் ஆற்று நீரில் மூழ்கி எழும் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் செரையாம் பாளையத்தில் உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக ஆலமரம் ஒன்று உள்ளது. இதை அக்கிராம மக்கள் தெய்வமாக கருதி ஆண்டு தோறும் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆலமரம் இருக்கும் பகுதி வழியே உயர் அழுத்த மின்பாதை கோபுரம் அமைப்பதற்காக, மரத்தை அடியோடு சாய்ப்பதற்கு மின்வாரியத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இதை அறிந்த கிராம மக்கள் ஆலமரத்தை வெட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்களோ இது இடையூறாக உள்ளது என இயந்திரத்தை கொண்டு சாய்க்க முற்பட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அருகில் இருந்த பவானி ஆற்றின் நீரில் மூழ்கி நூதன போராட்டம் நடத்தினர்.

அவர்களின் போராட்டத்தை உணர்ந்த மின்வாரிய உயர் அதிகாரி, ஆலமரத்தை வெட்டுவதை கைவிட்டதோடு மட்டுமில்லாமல், மின்பாதை கோபுரம் மற்றொரு இடத்தில் வைத்து கொள்வதாக உறுதியளித்து சென்றார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஆலமரத்தின் அருகே பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு…!!
Next post மன்னார் பிரதேசத்தில் நாளை நீர் வெட்டு…!!