அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி காட்டிய மனிதாபிமானம் : தானும் அழுது ஏனையவர்களையும் கண்ணீர் சிந்தவைத்தார் (காணொளி)

Read Time:3 Minute, 40 Second

downloadஅமெரிக்காவின் ஜெபர்சன் கவுன்ட்டி மாவட்ட நீதிபதி அம்பர் வூல்வ் ஒரு சிறைக்கைதியின் கண்களில் தெரிந்த கவலை மற்றும் ஆதங்கத்தை புரிந்துகொண்ட மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட விதம் அந்த நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்திய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

ஒரு திருட்டு குற்றம் ஒன்றுக்காக ஜேம்ஸ் றொடர் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரினால் காவலில் வைக்கப்பட்டிருந்தான்.

இந்த வேளையில் அவனுக்கு குழந்தை பிறந்தது. காவலில் இருந்ததால் அவனால் குழந்தையை ஒரு மாதமாக பார்க்கமுடியவில்லை. இந்தநிலையில் ஜேம்ஸ் றொடர் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டபோது அவன் பிறந்த குழந்தையை பார்க்க வில்லை என்பதையும் அதன் காரணமாக அவன் மிகவும் கவலைகொண்டிருந்ததையும் புரிந்துகொண்ட நீதிபதி அம்பர் வூல்வ், நீதிமன்ற நடைமுறைகளுக்கு விதிவிலக்காக அவன் தனது குழந்தையை பார்க்க அனுமதித்தார்.

அவன் தனது குழந்தையை மனைவிடம் வாங்கி பார்த்தபோது தனது கண்களில் நீர்வருவதை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று நீதிபதி கூறினார்.

இந்த சம்பவத்தின்போது அந்த நீதிமன்றில் இருந்த அனைவரும் அழுதனர்.

இந்த சம்பவத்தின் காணொளி காட்சியை கீழே பாருங்கள்.

கைதியை பார்த்த நீதிபதி, நீர் சிறைக்கு போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்னமும் நீர் உமது 1 மாத குழந்தையை பார்க்கவில்லை. இது சரிதானா என்று கேட்கிறார். அதற்கு அவன் ஆம் அம்மணி என்கிறான்.

நான் இந்த நீதிமன்றத்தில் ஒரு தற்காலிக விதிவிலக்கை செய்து எனக்கு முன்பாக நீர் உமது குழந்தையை பார்க்க அனுமதிக்கறேன் என்கிற நீதிபதி இதுதான் உமது மகன் என்று கூறுகிறார்.

அப்போது அவனது மனைவி அந்த குழந்தையை அவனிடம் கொடுக்கிறார். குழந்தையை வாங்கி முத்தமிட்ட கைதி, சிறிதுநேரத்தில் மீண்டும் மனைவியிடம் கொடுக்கிறான்.

அப்போது நீதிமனத்தில் உள்ள அனைவரின் கண்களிலும் நீர் வடிகிறது. அப்போது நீதிமன்றத்தில் உள்ள அனைவரின் கண்களிலும் நீர் வடிகிறது. தனது கண்களில் நீர் வடிவத்தை நிறுத்த நீதிபதியாலும் முடியவில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீசாரிடம் சிக்கிய கத்தார் இளவரசி 7 பேருடன் விடுதியில் உல்லாசம்…!!
Next post ஞானசார தேரருக்காக ஜனாதிபதியை எச்சரிக்கும் நபர்…!! வீடியோ