By 1 September 2016 0 Comments

சீ.வி.விக்னேஸ்வரன் – பான் கீ மூன் சந்திப்பு…!!

index-5இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
பான் கி மூன் நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்திக்கும் அவர் பின்னர் வடக்கு முதல்வரை தனியாக சந்திப்பார் என தெரியவந்துள்ளது.

மேலும் வடமாகாண அளுனர் ரெஜினோல்ட் குரேயையும் மூன் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

அன்றைய தினம் கொழும்புக்குத் திரும்பும் பான் கி மூன், கொழும்பில் ஊடகவியலளார்களைச் சந்திப்பதுடன் அவருடைய இலங்கைக்கான விஜயம் முற்றுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..



Post a Comment

Protected by WP Anti Spam