3-வது சம்மனுக்கும் பதிலில்லை .. கைதாகிறார் கார்த்தி சிதம்பரம்?

Read Time:2 Minute, 33 Second

02-1472811322-karti-chidambaram467டெல்லி: ஏர்செல்மேக்சிஸ் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்து வரும் ப.சிதம்பரம் மகனான, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் (2004-07 ஆண்டு வரை மத்திய அமைச்சராக இருந்தவர்) சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742.58 கோடி அளவுக்கு முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடுடன் தொடர்புடைய ஏர்செல்-மேக்சிஸ் பேர விவகாரத்தில், மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் இயக்குநராக உள்ள செஸ் குளோபல் அட்வைசரி சர்வீசஸ், அட்வான்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் ஆகிய நிறுவனங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

அதிரடி சோதனை இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், செஸ் குளோபல் நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் கடந்த டிசம்பர் மாதம் அதிரடிச் சோதனைகளை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது. அவரது நண்பர்கள் சிலரும் இந்த நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளதாகக் கூறப்பட்டது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாங்குன பணத்தை கொடுக்கலன்னா ஆசைக்கு இணங்கு… 68 வயது ஆசிரியர் கொலை… கணவன் மனைவி கைது…!!
Next post தீக்குளிக்க முயற்சித்த இன்ஸ்பெக்டர் காஞ்சனா.. தடகள போட்டிய்யில் 350 தங்கம் வென்றவர்…!!