15 பிள்ளைகளை பெற்ற தாய் அனாதரவான நிலையில்..!!

Read Time:2 Minute, 18 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)தாய் ஒருவர் தான் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து சகல நேரத்தையும் தனது அன்பான குழந்தைக்காகவே செலவிடுவார்.

எனினும் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர், பெற்ற தாய் மற்றும் தந்தையை அனாதரவாக விட்டுச் செல்லும் சம்பவங்கள் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இப்படியான சம்பவம் ஒன்று அனுராதபுரம் மிகிந்தலை பிரதேசத்தில் நடந்துள்ளது.

15 பிள்ளைகளை பெற்ற தாய் ஒருவரை அவர் பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் தாயை எவரும் இல்லாத அனாதை போல் அனாதரவாக விட்டுச் சென்றுள்ளனர்.

மிகிந்தலை கல்லன்சின பிரதேசத்தில் கோனேவ என்ற கிராமத்தில் 80 வயதான இந்த தாய் வாழ்ந்து வருகிறார்.

இந்த தாய் மூலம் உலகத்தை கண்ட 15 பிள்ளைகளில் 11 பேர் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

வயதான இந்த தாயை பிள்ளைகள் எவரும் கவனிப்பதில்லை. தாய் வசிப்பதற்கு வீடொன்றும் இல்லாத நிலையில் கூடாரம் ஒன்றில் வசித்து வருகிறார்.

கிராம மக்கள் வழங்கும் உணவை உண்டே இந்த தாய் உயிர் வாழ்ந்து வருகிறார்.

பிள்ளைகளின் அரவணைப்பு தேவைப்படும் வயதில் இருந்து வயதான இந்த தாய் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பான் கீ மூன் – விக்னேஸ்வரன் சந்திப்பு…!!
Next post என்னது பெண் குழந்தையா? கர்ப்பிணி வயிற்றில் ஆசிட் ஊற்றிய கொடூரம்…!!