By 17 September 2016 0 Comments

ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்..!!

201609171315133666_anymore-will-dance-to-one-song-kajal-agarwal_secvpfதமிழ், தெலுங்கில் முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல்அகர்வால். தமிழில் அஜீத்தின் புதிய படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் நடித்து வருகிறார். இந்த படங்கள் தமிழ்-தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தெலுங்கில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் இவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். இதை தெலுங்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்து வருகிறார்கள். சிலர் ‘ஐட்டம் சாங்’ என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

இதுபற்றி கூறிய காஜல் அகர்வால், ‘‘நட்புக்காக அந்த படத்தில் நடனம் ஆடினேன். இதை ‘ஐட்டம் சாங்’ என்று சொல்லக் கூடாது. ‘ஸ்பெ‌ஷல் சாங்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

பலரிடம் இருந்து இதுபோன்று ஒரு பாடலுக்கு நடனமாட அழைப்பு வருகிறது. எனவே இனி நட்புக்காக கூட இதுபோன்று ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன்’’ என்று சொல்லி இருக்கிறார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.



Post a Comment

Protected by WP Anti Spam