அருகம்புல்லின் ஆயுர்வேத நன்மைகள்…!!

Read Time:3 Minute, 51 Second

ayurvedichealthbenefitsofwheatgrass-585x439அருகம்புல் என்பது நாம் அதிகம் விநாயகருக்கு கோவிலில் படைக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறோம். நமது வீட்டு வாசல், தெரு ஓரங்களில்,வெற்று இடங்களில் அனாமத்தாக விளையும் இந்த அருகம்புல் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தரவல்லது.
அருகம்புல் ஓர் அற்புதமான மூலிகை மருந்தாகும்.

ஆயுர்வேத முறையில் இதை பல உடல் உபாதைகள், உடல்நலக் கோளாறுகளுக்கு அருமருந்தாக பயன்படுத்துகின்றனர். உடல் பருமனை குறைப்பதில் இருந்து, தாய்பால் நன்கு சுரக்க வைக்கும் வரை பல நன்மைகளை அளிக்கிறது அருகம்புல்!

நன்மை #1

வாழைத்தண்டு, பூசணி மற்றும் அருகம்புல், இந்த மூன்றில் ஏதேனும் ஒரு சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், உடல் பருமன் அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.

நன்மை #2

அருகம்புல் சாற்றை தாய்ப்பாலுடன் கலந்து குடித்து வந்தால் கண்ணில் சதை வளர்வதை தடுக்க முடியும்.

நன்மை #3

அருகம்புல் சாற்றுடன் தேன் கலந்து தினமும் காலை உண்டு வந்தால் உடலில் உள்ள ஊழைச்சதை குறையும். உடல் வலிமை அடையும்.

நன்மை #4

அருகம்புல், செவ்வாழைப்பழம், மாதுளம் சாறு இந்த மூன்றையும், தினமும் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் கருப்பை வலுமை அடையும்.

நன்மை #5

சிரங்கு பிரச்சனை இருப்பவர்கள் அருகம்புல் மற்றும் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி, 1 மணிநேரம் நன்கு காய்ந்த பிறகு குளித்து வந்தால் நல்ல தீர்வு காண முடியும்.

நன்மை #6

மாதுளம் மற்றும் அருகம்புல் சாறு இதை இரண்டையும் சம அளவு கலந்து 30 மில்லி அளவு மூன்று வேலை பருகி வந்தால் மூக்கில் இரத்தம் வழியும் பிரச்சனைக்கு தீர்வுக் காணலாம்.

நன்மை #7

அருகம்புல் சாற்றை தினமும் காலை 10 மில்லி அளவு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்மை #8

ஒரு கைப்பிடி அளவு அருகம்புல்லை நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அத்துடன் பால் மற்றும் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சிறுநீர்ப்பை வலுமையடையும்.

நன்மை #9

உடல் வலியாக உணரும் நபர்கள், அருகம்புல்லும், வில்வ இலையும் சேர்த்து சாறு பிழிந்து காலை, மாலை இருவேளை 1 அவுன்ஸ் அளவு குடித்து வந்தால் உடல் வலி நீங்கும்.

நன்மை #10

தாய்பால் குறைவாக சுரக்கும் பெண்கள், அருகம்புல்லுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், தாய் பால் அதிகம் சுரக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் தமிழர்களும்…!!
Next post மலேசியாவுக்கு விரைந்த சிங்கம்-3 படக்குழு…!!