லட்சத் தீவு அருகே திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3-ஆக பதிவு…!!

Read Time:1 Minute, 25 Second

201610121125406075_53-magnitude-earthquake-felt-in-lakshadweep_secvpfஅரபிக் கடலில் உள்ள லட்சத் தீவு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.3-ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள யுனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவு. 36 தீவுகளை கொண்ட லட்சத் தீவு கேரளக்கரைக்கு அப்பால் 300 கிலோ மீட்டர் தூரத்தில் அரபிக்கடலில் உள்ளது.

இன்று அதிகாலை 4.01 மணி அளவில் லட்சத்தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.3 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவலின் படி இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.

அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மக்கள் திடீர் நிலநடுக்கத்தால் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். மீண்டும் நில நடுக்கம் வருமோ என்று பீதியில் வீட்டுக்குள் செல்லாமல் சாலையிலேயே அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம், பொருள் இழப்பு பற்றி அறிவிக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர் இல்லங்கள் பலவற்றில் 216 சிறுவர்கள் துஷ்பிரயோகம்…!!
Next post உறவுக்கு முன்பு பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்….!!