காட்டு யானை தாக்குதலில் இராணுவ வீரர் பலி…!!

Read Time:1 Minute, 59 Second

maxresdefaultமட்டக்களப்பு புணானை 23 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்த்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை புணானை காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கோப்ரல் திசநாயக்கா வயது (45) என்ற இராணுவ உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இராணுவத்தினருக்கான மேலதிக பயிற்சிகள் காட்டுப் பகுதியில் இடம்பெற்றபோது அவ்வழியினால் வந்த காட்டு யானை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களை தாக்குவதற்காக துரத்தியபோது ஏனைய வீரர்கள் ஓடி தப்பியுள்ளதாகவும் குறித்த வீரர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இவரது சடலம் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை இப்பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகமாக காணப்படும் பிரதேசமாகும்.கடந்த காலங்களில் இப்பகுதியில் குடி மக்களின் வீடுகள், வீதியால் செல்லும் வாகனங்கள் வயல் காவல் குடிசையில காவல் பார்க்கும் விவசாயிகள் என பலரும் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை விமானத்தில் பரிதாமாக மரணம்…!!
Next post இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பதில் பணிப்பாளர் நியமனம்…!!