By 2 November 2016 0 Comments

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்! இது காதலில் மட்டுமே- அறிவியல் விளக்கம்..!!

625-117-560-350-160-300-053-800-210-160-90காதல் அழகானது! இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு உன்னதமான உணர்வு என்று!

இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டிக் காத்துக் கொண்டு வருகிறது!

இளமை ஊஞ்சலாடுகிற வயசுல தொடங்கி முதுமை தாலாட்டுகிற வயது வரை நம் வாழ்க்கையில் காதல் நிரம்பியுள்ளது.

காதல்னா என்னனு கேட்டா…..

“காதல் ஒரு தெய்வீக உணர்வு”

“காதல் ஒரு தவிப்பு, சுகம், புத்துணர்ச்சி”

“காதல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி”

“காதல் ஒரு சுகமான வலி”

இப்படி சொல்லிகிட்டே போகலாம். ஆனால் இதெல்லாம் சினிமாவிற்கு தான் பொருந்தும்.

காதல் என்பதற்கான அறிவியல் பூர்வமான விளக்கம்

காதல் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்று கூறினால் மிகையாகாது.

காதல் செய்வதால் மன அழுத்தத்தை விரட்டும் ஆக்ஸிடோஸின் ஹார்மோன் சுரக்கின்றன.

இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் திறனும் கிடைக்கிறது.

இதேபோல, எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. காதலர்கள் மற்றவர்களை விட இளமையாகவே இருப்பார்கள்.

மேலும் திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு தனி அழகு வருவதற்கு பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் காரணமாம்.

இதனால் பெண்களின் கருத்தரிக்கும் திறன், முறையற்ற மாதவிலக்கு போன்றவையும் சரியாகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழகம் காதல் குறித்த ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இதில் காதல் ஜோடிகளை கைகளைக் கோர்த்துக்கொள்ளச் சொல்லி, எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து அவர்களது மூளையை கண்காணித்துள்ளார்கள்.

அப்போது அவர்களுக்கு வலி உணர்வு மிக குறைவாக இருப்பதையும், அடுத்தகட்டமாக, அறிமுகம் இல்லாத ஒருவரின் கைகளைப் பற்றிக்கொள்ள வைத்தும் அதேபோல எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து பார்க்கும் பொழுது மூளையில் ஏற்பட்ட மன அழுத்த அளவும், வலி உணர்வும் அதிகம் இருந்ததை உணர்ந்தார்கள்.

இந்த ஒரு ஆய்வின் மூலமாகவே காதலின் மகத்துவம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேலே குறிப்பிட்டவை எல்லாம் உண்மையான காதலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D



Post a Comment

Protected by WP Anti Spam