வரவு செலவுத்திட்டம் குறித்து இன்று விசேட சந்திப்பு…!!

Read Time:1 Minute, 30 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இன்று சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும், நிதி அமைச்சரும் இன்று இந்த விசேட சந்திப்பினை நடத்த உள்ளனர்.

நிதி அமைச்சில் இன்று காலை 8.30மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக் கட்சி செய்துள்ள பரிந்துரைகள் உள்ளடக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றைய சந்திப்பு குறித்து தொலைபேசி ஊடாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எப்படிபட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? இதோ ரகசியம்..!!
Next post ஆடம்பர வாழ்க்கைக்காக கொள்ளையிட்ட 17 வயது யுவதி கைது…!!