இனி இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் இல்லை…!!

Read Time:2 Minute, 4 Second

625-256-560-350-160-300-053-800-461-160-9025 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் வழங்கப்படக் கூடாது என, அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு தமது சங்கம் உள்ளிட்ட 12 சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனையை முன்வைத்து அதனை செயற்படுத்துமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 18 – 25 வயதுக்குட்பட்ட சில இளைஞர்கள் முச்சக்கர வண்டியை வினோதப் பொருளாக பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவற்றை தவிர்க்கும் பொருட்டு, 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தை வழங்காது விடலாம்.

அத்தோடு குறைந்தது 23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு வருட பயிற்சிக்கு பின்னர் இந்த அனுமதியை வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இதற்கு முன்னரும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்ததோடு, முச்சக்கர வண்டிகளின் ஒழுங்கமைப்புத் தொடர்பில் ஆணைக்குழு திணைக்களம் ஒன்றை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுய இன்பம் காண்பதால் ஆண்களின் தலைமுடி கொட்டுமா?
Next post மலையகத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் : தொழிலாளர்களுக்கு பாரிய ஏமாற்றம்…!!