ஆம்னி பஸ்சில் காங். நிர்வாகியின் சட்டை-பணம் மாயம்: டிரைவரிடம் போலீசார் விசாரணை..!!

Read Time:3 Minute, 42 Second

201611122226374695_omni-bus-congress-member-shirt-cash-missing-police_secvpfமார்த்தாண்டத்தை அடுத்த சாத்தங்கோடு, இடவாரை சேர்ந்தவர் ஆமோஸ்.
வர்த்தக காங். நிர்வாகி இவர் வர்த்தக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த 5-ந்தேதி சென்னையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க ஆமோஸ் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை சென்றார்.

அங்கு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். மாலையில் மீண்டும் ஊர் திரும்ப சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் சென்றார்.

அங்கு மார்த்தாண்டத்திற்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ் தயாராக நின்றது. அந்த பஸ்சில் ஆமோஸ் ஊருக்குப் புறப்பட்டார். அந்த பஸ்சில் தூங்கும் வசதி கொண்ட இருக்கைகள் உள்ளன. பஸ் புறப்பட்டதும் ஆமோஸ் சட்டையை கழற்றி இருக்கையின் மீது வைத்து விட்டு தூங்கினார்.

மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் பஸ் மதுரை புறநகர் பகுதியில் வந்தது. அப்போது கண்விழித்த ஆமோஸ் இருக்கையில் வைத்திருந்த சட்டையை காணாது அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் இது பற்றி பஸ்சின் டிரைவரிடம் புகார் கூறினார். சட்டையை கண்டு பிடித்து தரும்படி கேட்டார். அதற்கு டிரைவர் பஸ்சை வழியில் நிறுத்தி ஆமோசை இறக்கி விட்டார். இது பற்றி போலீசில் புகார் செய்யும் படியும் கூறினார்.

அதன்படி ஆமோஸ் மதுரை புறநகர் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். அவர்கள் இதனை சம்பந்தப்பட்ட ஊர் போலீசில் புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து வேறு பஸ்சில் ஏறி ஊர் வந்து சேர்ந்த ஆமோஸ், இந்த சம்பவம் பற்றி நேற்று முன்தினம் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதில் பஸ்சில் சட்டை காணாமல் போனதாகவும் அதில் ரூ. 3 ஆயிரத்து 180 ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருந்ததாகவும் கூறி இருந்தார்.

போலீசார் புகாரை பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ்சையும், அதன் டிரைவரையும் தேடி வந்தனர். இன்று காலையில் அந்த பஸ் சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தக்கலையில் அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்திய போலீசார் அதன் டிரைவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் காங்கிரஸ் நிர்வாகி ஆமோஸ் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் நிர்வாகியின் சட்டை காணாமல் போன சம்பவமும், இது தொடர்பாக பஸ்சின் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்க எந்த ராசி! உங்க காதல் வாழ்க்கைய பத்தி இங்க தெரிஞ்சுக்கலாம்..!!
Next post அனுஷ்காவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்…!!