தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு இலங்கை அரசின் மறுப்பறிக்கை

Read Time:0 Second

Slk.Flag.1.jpgஇலங்கை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள செஞ்சோலை காப்பகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் மாணவிகள் கொல்லப்பட்டது தொடர்பில், இலங்கை இராணுவத்தை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட கண்டனத்தீர்மானத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை மறுப்பறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபையின் தீர்மானத்திற்கு மறுப்பறிக்கை

தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் ஊகங்களின் அடிப்படையில் திரித்து கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இலங்கை அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூதரகத்தின் சார்பில் தமிழ் நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒருபக்க அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டசபை தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விடுதலை புலிகளால் அநாதை காப்பகம் என்று கூறப்பட்டுள்ள இடம் உண்மையில் இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக ஆட்களை சேர்த்து பயிற்சி அளிக்கும் விடுதலைப் புலிகளின் முகாம் என்றும், இவற்றைப்பற்றிய ஒளிநாடா இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர சமூகத்துடனும் பத்திரிகையாளர்களுடனும்� வெளியிடப்பட்டும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் குறைந்த வயதுடைய போராளிகளை பலவந்த ஆட்சேகரிப்பு மூலம் பயிற்சியளிப்பது பலகாலமாக நடைபெறுவதாகவும், அந்த அடிப்படையில் இராணுவ விமான தாக்குதலின்போது விடுதலைப்புலிகளால் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட நபர்களும் இருந்திருக்கலாம் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளதாகவும் இலங்கை அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

� விடுதலை புலிகள் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தினை சுயலாபத்திற்காக பயன்படுத்துவார்கள்
இலங்கை அரசின் மறுப்பறிக்கை

முல்லைத்தீவு இழப்பு உட்பட இச்சண்டையின் மூலம் ஏற்பட்டுள்ள சகல மனித இழப்புகளுக்கும் இலங்கை அரசு தனது முழுமையான கவலையை தெரிவிப்பதாகவும், விடுதலைப்புலிகளின் உந்துதலினால்தான் அரசாங்கம் தற்காப்புக்காகவே ஒரு வகை நிர்ப்பந்தத்தினால் நடத்திய தாக்குதலில் தான் இந்த மனித இழப்பு நேர்ந்தது என்பதை வலியுறுத்துவதாகவும் இலங்கை அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தமது கொடூர செயல்களால் ஏற்படும் மனித துயரங்களை தமக்கு சாதகமாக விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் விடுதலைப்புலிகள் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்துவர் என்பதில் ஐயமில்லை என்றும் இலங்கை அரசின் அறிக்கை கூறுகிறது.

Thanks…BBC

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரிட்டனில் பாதுகாப்பை மீறி பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் ஏறிய சிறுவன்
Next post துருக்கியில் சாலை விபத்து: 17 ஈரானியர்கள் சாவு