குளத்தில் தவறி விழுந்து கரைந்து போன இளைஞர்: சுற்றுலா சென்ற போது விபரீதம்…!!

Read Time:3 Minute, 11 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7அமெரிக்காவில் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர், தவறுதலாக அமில குளத்தில் விழுந்து கரைந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வியோமிங் மாகாணத்தில் புகழ்பெற்ற யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இது 1872ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த பூங்காவின் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள சில பகுதி மிகுந்த வெப்பமான சூழலை கொண்டது. இங்குள்ள குளம் ஒன்றில் தண்ணீர் அமிலத் தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. கடும் வெப்பத்தின் காரணமாக, கொதிக்கும் எண்ணெய் போன்று காட்சியளித்து வருகிறது.

இந்நிலையில் ஒரேகானைச் சேர்ந்த காலின் ஸ்காட்(23) என்ற இளைஞர், யெல்லோ ஸ்டோன் பூங்காவிற்கு தமது சகோதரியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது குறித்த பூங்காவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, தவறுதலாக அமிலக் குளத்தில் விழுந்துள்ளார்.

இதையடுத்து அந்த அமில நீரில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த சம்பவத்தை அவரது சகோதரி தமது மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். ஆனால் பொதுநலன் கருதி குறித்த வீடியோவை வெளியிடமாட்டாது என பூங்க நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இதனிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பூங்கா ஊழியர்கள் காலின் உடலை தேடி இறுதியில் கண்டறிந்தனர். இருப்பினும் அமிலம் பாதித்த உடலை அங்கிருந்து மீட்பதில் உள்ள சிரமம் குறித்தும் பூங்கா ஊழியர்கள் குறித்த நபரின் சகோதரியிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மறுநாள் வந்து பார்த்த போது, குளத்தில் உடல் இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. இதுகுறித்து பதிலளித்து பேசிய பூங்காவின் தலைமை அதிகாரி லாரெண்ட் வெர்ரஸ், அதிகப்படியான அமிலத்தன்மையால் உடல் கரைந்து போயிருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

பூங்காவின் பாதுகாப்பு வளையத்தை தாண்டிச் சென்றதால் தான், இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்சில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த பெயரை சூட்டுவதற்கு தடை…!!
Next post உடல்கள் நிறம் மாறி பரிதாபமாக உயிரிழந்த மாணவி: மருத்துவரின் அலட்சியம்…!!