குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க இப்படி எல்லாம் பெற்றோர் செய்யலாமா?

Read Time:2 Minute, 54 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2சுவிட்சர்லாந்து நாட்டில் 7 வயதான மகனை பாதுகாப்பாக வளர்க்க பல கட்டுப்பாடுகளை விதித்த பெற்றோருக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிஸின் St Gallen நகரை சேர்ந்த பெற்றோர் தங்களது 7 வயது மகனான மார்கோ என்பவனுடன் வசித்து வருகின்றனர்.

மகன் மீது அளவுக்கடந்த பாசம் வைத்துள்ள பெற்றோர் அவனது ஒவ்வொரு அசைவுகளையும் கூர்மையாக கவனித்து வந்துள்ளனர்.

உதாரணத்திற்கு, பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடினால் காயம் ஏற்படும் என அச்சப்பட்ட பெற்றோர் மகனை விளையாட அனுமதி அளிக்கவில்லை.

இதுமட்டுமில்லாமல், சிறுவயதில் குழந்தைகள் ஈடுப்படும் எந்த செயலையும் செய்ய விடாமல் மிகவும் பாதுகாப்பாக வளர்த்து வந்துள்ளனர்.

இதனால் 7 வயது சிறுவனுக்கு தேவையான எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படாததை பள்ளி ஆசிரியர் ஒருவர் கவனித்து அவனை உளவியல் மருத்துவரிடம் அனுப்பியுள்ளார்.

இதன் பிறகு தான் பெற்றோர் அவனை எப்படி வளர்கின்றனர் என்ற உண்மை வெளியாகியது.

‘மகனை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவனை எந்த செயலிலும் ஈடுப்படுத்தாமல் இருந்தால், அவனது வளர்ச்சி பாதிப்படையும்’ என உளவியல் மருத்துவர் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால், பெற்றோர் இதனை ஏற்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தினால் பள்ளி நிர்வாகம் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொன்று சென்றபோது பெற்றோருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.

எனினும், தங்களது கட்டுப்பாட்டில் தான் மகனை வளர்ப்போம் என பிடிவாதமாக உள்ள பெற்றோர் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், உச்ச நீதிமன்றமும் ‘மகனை உடனடியாக சிறப்பு பள்ளி ஒன்றில் சேர்க்க வேண்டும்’ என பெற்றோருக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் ஏற்காத பெற்றோர் தற்போது ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரில் மூழ்கும் அபாயத்தில் மட்டக்களப்பு…!!
Next post கழிவறைக்குள் உல்லாசமாக இருந்த ஜோடி: அதிரடியாக கைது செய்த பொலிசார்…!!