வட மத்திய மாகாண முதலமைச்சரின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி…!!
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல் ஜயரத்னவின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீகிரிய, சீகிமுல்ல பிரதேசத்தில் இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
54 வயதுடைய மெல்சிரிபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சர் பயணித்த ஜுப் வண்டி குறித்த முச்சக்கர வண்டியின் பின் பக்கத்தில் மோதுண்டுள்ளமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேஷல் ஜயரத்னவின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.