கதறி அழுத முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…!!

Read Time:2 Minute, 40 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70உடல்நலக் குறைவால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அதிகாலை 6 மணிக்கு அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசு மரியாதை செய்யப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டுள்ளது.

இறுதி சடங்குகள் செய்யப்படும் போதும் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வேளை ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுள்ளார்.

அத்தோடு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசின் உயர் அதிகாரிகளும் தமிழக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தங்களின் தலைவி மறைவுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் தலையில் அடித்துக்கொண்டும் கதறி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் ராஜாஜி அரங்கத்திற்குள் வரிசையாக வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோர்களை சுமையாக நினைக்கும் பிள்ளைகளே இது உங்களுக்குத்தான்..!! வீடியோ
Next post ஜெயலலிதாவுக்கு மக்கள், பிரபலங்கள் இறுதி அஞ்சலி: கண்ணீரில் தமிழகம்…!!