காங்கோ வன்முறையில் 13 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்த அவலம்..!!

Read Time:1 Minute, 38 Second

201612100455154750_fresh-congo-rebel-violence-displaces-13000-un_secvpfகாங்கோ மத்திய ஜனநாயக குடியரசு நாட்டில் சர்ச்சைக்குரிய அதிபர் மறு தேர்தல் தொடர்பாக வன்முறை வெடித்துள்ளது. காங்கோ போலீசாருக்கும், கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்து வருகிறது.

காங்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் அதிக அளவில் வன்முறை நிகழ்கிறது. அங்கு காங்கோ ராணுவத்தினருடன், நின்ஜா சிலோலோவ் கிளர்ச்சியாளர்கள் பிரிவினர் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கோ நாட்டில் சமீக காலமாக நடைபெற்று வரும் வன்முறை சம்பங்களில் சுமார் 13 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் போதிய அளவு உணவு கிடைக்காமலும், உடல் ஆரோக்கியமில்லாமலும் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியா இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு..!!
Next post சென்னை பெண் மாவோயிஸ்ட் உடலை தகனம் செய்ய தடை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு..!!