அஸ்வினுக்கு விரைவில் திருமணம்: காதலியை மணக்கிறார்…!!

Read Time:1 Minute, 47 Second

201612131305099340_actor-ashwin-married-to-lover_secvpfகவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் கக்குமனு. அதன்பிறகு, ‘மங்காத்தா’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘பிரியாணி’, ‘மேகா’, ‘வேதாளம்’, ‘ஜீரோ’ ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், அஸ்வினுக்கும், சோனாலி என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. சோனாலியும், அஸ்வினும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். டெக்ஸ்டைல் டெக்னாலஜி பட்டதாரியான சோனாலி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு குறும்படம் ஒன்றை இயக்கிய அஸ்வின், அதில் நடிக்க சோனாலியை தேர்வு செய்திருந்தார். அப்போது ஏற்பட்ட நட்பு, இருவருக்குள்ளும் காதலாகி தற்போது திருமணம் வரை சென்றிருக்கிறது.

இவர்களது காதலக்கு இரண்டு பேர் குடும்பத்திலும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள விருக்கிறார்கள். திருமண வரவேற்புக்கு திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பான் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் பாறைகள்…!!
Next post கங்காருடன் பாக்ஸிங் சண்டையிட்ட நபர்! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?.. வைரல் காட்சி