நீங்கள் தூங்கும்போது செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள் கூந்தல் உதிர்விற்கு காரணம்…!!

Read Time:3 Minute, 0 Second

23-1482487159-wethairகூந்தல் உதிர்விற்கு பகல் சமயங்களில் உண்டாகும் அபல் அலைகழிப்புகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அவை தவிர்த்து இரவுகளீல் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம்.

இறுக்கிய குதிரை வாலுடன் தூங்குவது : சாதரணமாகவே பகலில் இறுக்கிய குதிரை வால் போடுவது தவறு. இரவுகளில் குதிரை வாலுடனோ அல்லது இறுக்கி கூந்தலை பின்னுவதாலோ ரத்த ஓட்டம் குறைந்து முடி பலமிழக்கும். இதனால் அடர்த்தி குறைய வாய்ப்புகள் அதிகம். அதனால் தூங்கும்போது தலைமுடியை ஃப்ரீயாக விடுவது நல்லது.

ஈரத்தலையுடன் தூங்குவது : இரவில் தலைக்கு குளித்தபடி அரைகுறையாக காயவைத்து தூங்குவது கூந்தல் கற்றைகழை பலமிழக்கச் செய்யும். இதனால் கூந்தல் உதிர்தல் அதிகம் உண்டாகும், நன்றாக காய்ந்தபின்தான் தூங்க வேண்டும்.

பருத்தி தலையணைகள் : பருத்தி தலையணை நல்லதுதான். ஆனால் கூந்தலுக்கு நல்லதில்லை. கூந்தலில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை அவை உறிஞ்சிவிடும். முடி வறட்சி அதிகமாகி பிளவுகள் உண்டாகும். சாடின் சில்க் வகையறா தலையணை நல்லது

தலைக்கு ஷவர் கேப் : உங்களுக்கு அதிக வறட்சியான கூந்தல் என்றால் , தூங்கி எழும்போது இன்னும் தலைமுடி வறண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு சரியான வழி தலைக்கு ஷவர் கெப் அல்லது ஏதாவது ஒன்றால் தலையை கவர் செய்தபின் தூங்குவதுதான்.

தலை வாருதல் : இரவுகளில் திசுக்கள் வளரும் நேரம் என்பதால் அந்த சமயங்களில் தலையை படிய வாரினால் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து கூந்தல் திடமாகும். கூந்தல் ஊட்டம் பெற்று வளர்ச்சி பெறும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதர்கள் இல்லை என்றால் உலகம் எப்படி இருக்கும்….? வீடியோ
Next post காஞ்சீபுரம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்: 6 வயது சிறுமி பலி…!!