72 மணி நேரத்தில் உடல் எடை குறைக்கலாம்: இதை மட்டும் டிரை பண்ணுங்க..!!
உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்ந்தால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலும் கல்லீரலின் செயல்பாடு மிகவும் அவசியம். கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது உடல் எடை குறைவதில் தாமதமாக்கும்.
இதனால் தான் கல்லீரலை சுத்தம் செய்து உடல் எடையை குறைப்பதற்கான ஒரு பானம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்.
பானத்தில் உள்ள உட்பொருட்கள்
உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் எலுமிச்சையும், செரிமானத்தை சீராக்க வைட்டமின்கள் நிறைந்த பார்ஸ்லியும், செலரி கீரையும் இங்கு உள்ளது. இவைகள் கல்லீரை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள்.
தேவையான பொருட்கள்
செலரி கொத்து – 5
தண்ணீர் – 6 கப்
எலுமிச்சை – 3
நறுக்கிய பார்ஸ்லி – 1 கப்
தயாரிக்கும் முறை
முதலில் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, பார்ஸ்லி, செலரி ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கல்லீரலை சுத்தம் செய்யும் பானம் தயார்.
‘
பருகும் முறை
பானத்தை தினமும் மூன்று வேளை உணவு உட்கொள்ளும் முன் ஒரு சிறிய டம்ளர் பருக வேண்டும். இப்படி மூன்று நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பின் வேண்டுமானால், மீண்டும் இந்த சிகிச்சையை 7 முதல் 10 நாட்கள் கழித்து பின்பற்றலாம்.
மேலும் குறிப்பாக இந்த சிகிச்சையைப் பின்பற்றும் போது, வயிறு நிறைய உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இது சுத்தம் செய்யும் சிகிச்சை என்பதால், குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
இதனை பின்பற்றில் 72 மணி நேரத்தில் உடல் எடையை குறைக்கலாம்.
Average Rating