செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்
Read Time:1 Minute, 20 Second
செப்டம்பர் 7ம் தேதி நள்ளிரவு 11.35 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 1.08 வரை சந்திரகிரகணம் ஏற்படவுள்ளது. இந்திய கிரகணத்தை இந்தியா முழுவதும் தெளிவாகக் காண முடியும். சந்திர கிரகணம் உருவாகும் நேரத்தில நியூசிலாந்து, பசிபிக் கடல் பிராந்தியத்தின மையப்பகுதி, ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி, ஜப்பானின் கிழக்குப் பகுதி, ரஷியாவின் வட கிழக்கில் தெளிவாக தெரியும்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிரகணத்தை தெளிவாகக் காண முடியும். அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் இங்கிலாந்து உள்ளிட்ட சில பகுதிகளில் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.
கிரகணம் மறையும்போது ஆப்பிரிக்காவின் வட மேற்குப் பகுதிகள், ஐரோப்பியாவின் மேற்குப் பகுதிகள், அயர்லாந்து, அட்லாண்டிக் கடலின் மையப் பகுதிகளில் தெளிவாக தெரியும்.